ஜென்ம மாதத்தில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாதா.?!  - Seithipunal
Seithipunal


1. ஜென்ம மாதத்தில் திருமணம் செய்யலாமா?

ஜென்ம மாதத்தில் திருமணம் செய்தல் என்பது உத்தமம் அல்ல. மற்ற சுப மாதங்களில் திருமணம் செய்தல் நல்லதாகும்.

2. ருத்ராட்சம் மண்ணில் இருந்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் ஆன்மீகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

3. நகையை தேடுவது போலவும், விசேஷம் நடப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

உடைமைகளை சற்று கவனமாக வைத்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. கோழி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பணிபுரியும் இடங்களில் உயர்பதவிக்கான வாய்ப்புகள் தவறிப்போகும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

5. தெரியாத ஒரு நபர் எனக்கு சேலை தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. 2ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

இனிமையாக பேசக்கூடியவர்கள்.

எதிர்பாலின மக்களின் மூலம் தனலாபம் அடையக்கூடியவராகவும் இருப்பார்கள்.

கற்பித்தல் பணி மற்றும் ஆலோசனை வழங்கக்கூடிய அமைப்பை பெற்றவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. எனக்கும், என் அப்பாவுக்கும் சண்டை வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

தந்தை மற்றும் மகனுக்கிடையேயான உறவில் புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

8. குரங்கு என்னை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

9. பூஜைக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன பலன்?

எதிர்பார்த்த சில காரியங்களில் தடங்கல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

10. வெள்ளிக்கிழமையன்று வீட்டை சுத்தம் செய்யலாமா?

வெள்ளிக்கிழமையன்று வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. 

11. குளிகை நேரத்தில் புதிய நகைகளை அணியலாமா?

குளிகை நேரத்தில் புதிய நகைகளை அணியலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

spiritual tips and doubts


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->