சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023... உங்கள் ராசிக்கு யாரை வழிபட வேண்டும்?
sani peyarchi 2020 to 2023 in 12 rasi
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனிதேவர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மேஷம் :
மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று அவரவர்களின் குலதெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம்.
ரிஷபம் :
திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசித்து வருவதன் மூலம் சுபிட்சம் உண்டாகும்.
மிதுனம் :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
கடகம் :
அஷ்டமி தோறும் விரதமிருந்து பைரவர் வழிபாடு மேற்கொள்வது குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழலை உண்டாக்கும்.
சிம்மம் :
ஸ்ரீவாஞ்சியம் சென்று சந்தோஷ சனிபகவானை தரிசித்து வர நன்மைகள் பெருகும்.
கன்னி :
திருப்பைஞ்ஞிலி சென்று எமதர்மனுக்கு வழிபாடு செய்து வர ஆரோக்கியம் மேம்படும்.
துலாம் :
ஞாயிற்றுக்கிழமைதோறும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்துவர முயற்சிகள் கைகூடும்.
விருச்சிகம் :
சதுர்த்தியன்று விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
தனுசு :
வியாழக்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேம்படும்.
மகரம் :
சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும்.
கும்பம் :
தேனியில் உள்ள குச்சனூர் சனீஸ்வர பகவானை வணங்கிவிட்டு அதற்கு பின்புறம் உள்ள வடக்கு பார்த்த தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்ய நன்மைகள் பெருகும்.
மீனம் :
மூல நட்சத்திரத்தன்று வடமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர தெளிவு கிடைக்கும்.
English Summary
sani peyarchi 2020 to 2023 in 12 rasi