சனிப்பெயர்ச்சி பலன்கள்... 2020-2023..!! அதிர்ஷ்ட காற்று... எந்த ராசிக்கு?.
sani peyarchi 2020 to 2023
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மார்கழி மாதம் 11ஆம் தேதியின் பின்னிரவு அதாவது (27.12.2020) அதிகாலை 05.16 மணிக்கு சனியானவர் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
உழைப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திறமையுள்ளவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்தாலும்கூட அதிர்ஷ்டத்தின் மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்டவர்களாக தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.
இப்படிப்பட்ட எதையும் சரியென நிர்ணயிக்க முடியாத வாழ்க்கையில் நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருப்பது அதாவது, வாழ்க்கையில் ஏதாவது நடந்து நாம் முன்னேற்றம் அடைய மாட்டோமா?... என்பதாகும். இதையேதான் நாம் அதிர்ஷ்டம் என்று அழைக்கிறோம்.
இந்த அதிர்ஷ்டம் என்பது நம்மை மட்டும் அல்லாது இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் நவகிரகம் ஏற்படுத்தும் ஒரு செயல் ஆகும்.
நாம் செய்த கர்ம வினைக்கு ஏற்ப நற்பலன்களை அளிக்கக்கூடியவர் சனிதேவர். வருகின்ற சனிப்பெயர்ச்சியால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிகள் பின்வருமாறு :
ரிஷபம்
கன்னி
விருச்சிகம்
மகரம்
மீனம்
கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிக்கும். அதாவது திசா புத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
English Summary
sani peyarchi 2020 to 2023