நவராத்திரி நாட்களில் இதையெல்லாம் கட்டாயம் கடைபிடியுங்கள்.!
Navarathiri special do Or Do not
நவராத்திரி என்ன செய்யலாம்:
அப்படி வழிபடும் பொழுது சில பூஜை நியமங்கள், நியதிகள் மற்றும் வழிபாட்டு முறைகளை பின்பற்றுவது அவசியம்.
துர்கா பூஜை எனும் பெயரில் நவராத்திரி விழா மிகப்பெரிய விழாவாக கொண்டாட படுகின்றது. நவராத்திரியின் 9 நாட்களும் பெண்கள் கடும் விரதம் இருந்து, அம்பாளை வழிபடுவார்கள்.
அம்பிகை வழிபாட்டில் முக்கியமானதாக கருதப்படும் நவராத்திரி விழாவை, தற்பொழுது நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய வேண்டும்?
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளைகளும் குளிக்க வேண்டும்.
நவராத்திரி காலங்களில் தூய்மையான ஆடைகளை மட்டுமே உடுத்த வேண்டும்.
மங்கல ஆரத்தியின் போதும், பூஜையின் போதும் அன்னை பராசக்தியை போற்றும் மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
வளையல்கள், குங்குமம் ஆகிய மங்கல பொருட்களால் அம்பாளை அலங்கரித்து, பூஜைகள் செய்ய வேண்டும்.
நவராத்திரியின் 9 நாட்களும் அம்பாளின் முன் தூய பசு நெய்யினால் அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். இது வீட்டில் நிம்மதியையும், செல்வ வளத்தையும் பெருக செய்யும்.
திருமணமானவர்கள் 9 நாட்களும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம்.
English Summary
Navarathiri special do Or Do not