முருகனின் அறுபடை வீடுகளும்.. அவற்றின் வரலாறும்..!
Murugan arupadai Veedu
தமிழ் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளன. அவை உருவான விதம் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் தற்போது பார்போம்.

பழநி: ஞானப்பழம் கிடைக்காததால் முருகன் பெற்றோரிடம் கோபம் கொண்டு ஆண்டி கோலத்தில் நின்ற இடம் தான் பழனி. இங்குள்ள முருகன் சிலை போகரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதால் செய்யப்பட்டது. அங்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களை உட்கொண்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

திருப்பரங்குன்றம்: தேவர்களை சிறை மீட்டதற்க்கு நன்றி கடனாக இந்திரன் தனது மகள் தெய்வானையை மணம் செய்து கொடுக்க முடிவு செய்து இருவருக்கும் மணம் நடைபெற்ற இடம் திருப்பரங்குன்றம் என கூறப்படுகிறது.

திருச்செந்தூர்: முருகன் சூரபத்மன் என்னும் அசுரனுடன் போரிட்டு வதம் செய்த இடம் திருச்செந்தூர். இந்த இடம் முதலில் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள திருத்தலம் இது என்பது குறிப்பிடதக்கது.

சுவாமிமலை: அறுபடை வீடுகளில் நான்காம் வீடாக திகழ்வது சுவாமி மலை. பிரணவமந்திரத்தின் பொருளை சிவ பெருமானுக்கு முருகன் உபதேசித்த இடம் சுவாமி மலை ஆகும். இந்த கோவில் திருவேரகம் எனவும் அழைக்கப்படுகிறார்.

திருத்தணி: அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக இருக்கிறது திருத்தணி ஆகும். வள்ளியை மீது காதல் கொண்டார். ஆனால் வள்ளியின் தந்தை மணம் செய்து கொடுக்க மறுக்கவே அவரை போரில் வென்று போர்கோலத்திலேயே வள்ளியை மணமுடித்த தலம் திருத்தணி ஆகும்.

பழமுதிர்ச்சோலை: அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக திகழ்வது பழமுதிர்ச்சோலை. இந்த தலம் அருணகிரிநாதரால் பாடபெற்ற தலமாகும். வள்ளியை திருமணம் செய்ய முருகனுக்கு விநாயகர் உதவ வந்த இடமாக பழமுதிர்சோளை இருக்கிறது.