இன்று மகாளய அமாவாசை.. முன்னோர்களை வழிபட்டு ஆசியை பெறுங்கள்.. வாழ்க்கை சிறக்கும்..!! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும், மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம்.

ஆனால், தற்போது உள்ள சூழலில் தமிழகம் முழுவதும் முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கோவில்கள் முக்கிய நதிக்கரைகள், கடற்கரைகளில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யலாம்?

தர்ப்பணம் செய்ய இருப்பவர்கள் புரோகிதர்களை அழைத்து அல்லது புரோகிதர்களின் ஆலோசனைபடி அவரவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டில் அல்லது பக்கத்தில் இருக்கும் நதிக்கரைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் விட்டு வேண்டி கொள்வது அவசியம்.

அன்னதானம், உடை தானம், பசு தானம், செருப்பு, குடை ஆகியவைகளை தானமாக கொடுக்கலாம். இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள்.

வீட்டில் செய்ய வேண்டியவை :

தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாற்ற வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும்.

கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

வீட்டில் தெய்வங்கள் சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது.

தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

தானம் செய்யுங்கள் :

இன்று உங்களால் எந்த தானம் செய்ய முடியுமோ? அந்த தானத்தை செய்யுங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம் - கண்பார்வை தெளிவடையும்

அரிசி - நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும்

நெய் - தீராத நோய்களை போக்கும்

பால் - துன்பங்கள் நீங்கும்

பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

தேங்காய் - நினைத்த காரியம் ஈடேறும்

நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

பூமி தானம் - ஸ்வர தரிசனம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

makalaya amaivasai 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->