வருகிறது மகாளய அமாவாசை! மொத்த  முன்னோர்களும் 15 நாள் நம்முடன்.. நீங்கள்  அறிந்திராத  பல தகவல்! - Seithipunal
Seithipunal


தை, ஆடி அமாவாசை மற்றும் மாத அமாவாசைகளை விட புரட்டாசி அமாவாசை மிக மிக சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை 'பெரிய அமாவாசை" அல்லது 'மகாளய அமாவாசை" என்று சொல்வார்கள். 

புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் துவங்கி அமாவாசை வரை தொடர்ந்து 15 நாளும் தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த 15 நாட்களும் மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.

இந்த 15 நாளும் மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக நம்மோடு தங்குவார்கள் என்பதும் ஐதீகம்.

மாதாமாதம் வரக்கூடிய அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். மஹாளய அமாவாசை தினத்தில், தாய், தந்தைவழி முன்னோருக்கு மட்டுமில்லாமல், நம் ஆசிரியர், நண்பர், உறவினர்கள், அங்காளி, பங்காளி என அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதனால் தான் இந்த மஹாளய அமாவாசை தனி பெரும் சிறப்பை பெறுகிறது.

இந்த ஆண்டு புரட்டாசி 27 ஆம் தேதி, (அக்டோபர் 14 ஆம் தேதி) சனிக்கிழமை மகாளய அமாவாசை வருகிறது. 

அமாவாசை நாளில் இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து செய்கின்ற வழிபாடு மற்றும் அன்னதானம் போன்றவற்றை ஏற்று கொள்வதற்காக முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.

நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை ஆத்மாக்களுக்கு மகிழ்விக்கும் என்பதும், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும், நம் சந்ததியினருக்கும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இறந்த தாய், தந்தைக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், இறந்த தேதி மற்றும் திதி போன்றவற்றை மறந்தவர்கள் மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம்.

மேலும், விபத்து, துர்மரணம், அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த மகாளய அம்மாவாசை மிக உகந்ததாகும்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது. அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ணிய கால தர்ப்பணம், வருஷ சிரார்த்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

புனிதமான மகாளய அமாவாசை நாளில் ஏழைகள், இல்லாதோர் அல்லது இயலாதோர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்ய, நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.

மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது. 

தமிழகத்தில் மஹாளய அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் புனித நீராடி, மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

இந்த புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahalaya Amavasya Hindu Temple Soul


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->