மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்; டிக்கெட் முன்பதிவு எதிர்வரும் 29-ந் தேதி தொடக்கம்..! 
                                    
                                    
                                   Madurai Meenakshi and Sundareswarar Thirukalyanam Ticket bookings begin from the upcoming 29th
 
                                 
                               
                                
                                      
                                            மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா எதிர்வரும் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மே 06-ந் தேதி  நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, 07-ந் தேதிக்கு விஜயம் நடைபெறுகிறது.அடுத்ததாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு மே 08-ந் தேதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். 09-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண சீட்டை 29-ந் தேதியில் இருந்து நேரில் வந்தும் பதிவு செய்துகொள்ள முடியும். அதற்கு ஆதார் நகல், புகைப்படத்துடன் அடையாள சான்று மற்றும் தொலைபேசி எண், இ-மெயில் முகவரி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான முன்பதிவுகள் இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து செல்போன் எண், இ-மெயிலுக்கு மே 03-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டோர் மே 04-ந் தேதி முதல் 06-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்., இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண கட்டணச்சீட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருக்கல்யாணம் அன்று ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு மொட்டை முனீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியிலும், ரூ.200 கட்டன சீட்டு பெற்றவர்கள் வடக்கு, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள். எனவே அன்று காலை 05 மணியில் இருந்து 07 மணிக்குள் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை பார்க்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Madurai Meenakshi and Sundareswarar Thirukalyanam Ticket bookings begin from the upcoming 29th