இந்த இடத்தில் மச்சம் இருந்தால்... அனைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வர்..!!
macham palan 12
இடது காதின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் அனைத்து வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வர். சொந்த முயற்சியால் முயன்று பொருட்சேர்க்கையை அடைவார்கள். பூர்வீகச் சொத்துக்கள் இருக்கப் பெற்றவர்கள். கணவன் அல்லது மனைவி ஆரோக்கியத்துடன் வாழ்வர்.
வலதுபுறக் காதின் நுனியில் மச்சம் இருந்தால் நீரால் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாகும்.
காதின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் சுகபோகத்துடன் வாழக்கூடியவர்கள். சுயமுயற்சியால் முன்னேறக்கூடியவர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
பெண்களுக்கு காதுகளின் பின்புற மச்சம் :
பெண்களுக்கு காதுகளின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுடைய கையில் பணம் தாராளமாய் நடமாடும். ஆனால், பணம் கையில் தங்காது. எல்லாமே செலவாகிவிடும். வரவுக்கும், செலவுக்கும் சரியாய் இருக்கும்.
அவர்களுக்கு நல்ல கணவர் அமைவார்கள். அவரால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் குடும்பத்திலுள்ள மற்றவர்களால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாய் இருக்கும். மற்றவர்களுக்கு பல உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் ஓரளவுதான் உதவி செய்ய முடியும்.
வலக்காதின் முனையில் மச்சம் :
வலக்காதின் முனையில் மச்சம் இருந்தால் அவர்கள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அதனால் நெருங்கி பழகும் பெண்களிடம் கூட மிக தயங்கி தான் பேசுவார்கள்.
ஆண்களுக்கு காதுகளின் பின்புற மச்சம் :
ஆண்களுக்கு காதுகளின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களிடம் பரம்பரை சொத்து நிறைய இருக்கும். இருப்பினும், அவர்களும் உழைத்துச் சம்பாதித்து மேலும் சொத்துக்களை வாங்குவார்கள்.
அவர்களுடைய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்ததாய் இருக்கும். அவர்களுக்கு அழகான மனைவி அமைவாள். அவர்களுடைய உடல் ஆரோக்கியம் திருப்திகரமாய் அமையும்.
வலக்காதின் முனையில் மச்சம் :
வலக்காதின் முனையில் மச்சம் இருந்தால் அவர்களுள் பெரும்பாலானவர்கள் குளம், ஏரி, ஆறு போன்றவற்றில் இறங்கி குளிக்க பயப்படுவார்கள். நீரினால் அவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.