சீமானை கைது செய்ய வேண்டும்.. நாயுடு நாயக்கர் மகாஜன சங்கத்தினர் வலியுறுத்தல்.!
Seeman should be arrested Naidu Naicker Mahajana Sangha urges
தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி வட்டார நாயுடு நாயக்கர் மகாஜன சங்கத்தினர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆண்டிபட்டி நாயுடு, நாயக்கர் மகாஜன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் இடத்தில் நடந்தது.அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த வட்டார நாயுடு ,நாயக்கர் மகாஜன சங்க நிர்வாகிகள் கூறியதாவது, தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தெலுங்கர் இன மக்களையும், தெலுங்கு மொழி பேசுபவர்களையும், குறிப்பாக நாயுடு ,நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை தரக் குறைவாக ,இழிவாக, அவமரியாதையாக பேசி வருகிறார்.

பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறையோ, அரசோ எடுக்கவில்லை .இனி வரும் காலங்களில் தொடர்ந்து இவ்வாறு பேசினால் தேவையில்லாத பிரச்சனைகள் எழும். எனவே தமிழக அரசு தொடர்ந்து அவதூறு பேசி வரும் சீமானை கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இது தொடர்பாக சீமானுக்கு எதிராக பேசி, தற்போது போலீசாரால் கைசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சந்தோஷ் என்பவரை விடுவிக்க, சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினர்.
English Summary
Seeman should be arrested Naidu Naicker Mahajana Sangha urges