விருட்ச சாஸ்திரம் : வீட்டில் எலுமிச்சை மரத்தை வளர்க்கலாமா? - Seithipunal
Seithipunal


வீட்டில் எலுமிச்சை மரத்தை வளர்க்கலாமா?

எலுமிச்சை அம்மனுக்கு உரித்தானதாகும். இயல்பாகவே தெய்வீக சக்திகளையும், மந்திரங்களை தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மையையும் பெற்றது.. அதனால் தாராளமாக எலுமிச்சை மரத்தை வீட்டில் வளர்க்கலாம்.

எலுமிச்சை மரத்தை வீட்டில் வளர்ப்பதால் தீய சக்தி அண்டாது. மேலும் எலுமிச்சை கனிகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, தெய்வீக சக்திக்கும் பயன்படுகிறது.

ஆன்மீகவாதிகள் எலுமிச்சை பழத்தை தேவகனி என்று அழைப்பார்கள். நம் மண்ணின் முக்கனிகளான மா, பலா, வாழைகளுக்கு இல்லாத சிறப்பு எலுமிச்சை பழத்திற்கு உண்டு.

இது மற்ற கனிகளை காட்டிலும் மனித எண்ணங்களை ஈர்க்கும் சக்தி அதிகம் கொண்டது என்பதால் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்பட்டிருக்கும். 

தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாற்றும் வழக்கம் உள்ளது. கனிமாலை என்றால் அது எலுமிச்சை பழ மாலையையே குறிக்கும். துர்க்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாற்றுவார்கள்.

சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள்.

எலுமிச்சை பழம் ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன.

தினமும் எலுமிச்சைச்சாறு குடிப்பதன் முலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து, சிறுநீர்ப்பையில் கல் சேர்வதை தடுக்க உதவுகிறது.

எங்கு வளர்க்கலாம்?

வீட்டில் எலுமிச்சை மரத்தை வளர்க்கலாம். ஆனால் எலுமிச்சை மரத்தை வீட்டின் முன்பகுதியில் வளர்ப்பதை தவிர்த்து வீட்டின் பின்புறத்தில் வைக்க வேண்டும். 

எந்த திசையில் வளர்க்கலாம்?

எலுமிச்சை மரங்களை வடக்கு திசையில் வைத்து பராமரித்து வரலாம்.

எலுமிச்சை மரத்தை தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் உள்ள தோட்டங்களில் வளர்ப்பதும் நன்மை தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lemon tree in our home good or bad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->