மீனாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்கும் கொலு திருவிழா.!  - Seithipunal
Seithipunal


மீனாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக தொடங்கும் கொலு திருவிழா.! 

கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் கோவில். இந்தக் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா இன்று முதல் ஆரம்பமாகி 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை உள்ளிட்ட விஷேச பூஜைகள் நடைபெறும். 

இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 
மேலும், பதின்மூன்று அரங்குகளில் அலங்கார பொம்மைகளுடன் கொலுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. 

கொலு திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

இந்த கொழுத்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைகமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். இதற்காக பொற்றாமரை குளம், கோபுரங்கள், மற்றும் சன்னதிகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kolu function start from today in madurai meenatchi amman temple


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->