கையில் கயிறு கட்டுபவர்கள் நீங்கள்? அப்போ இதனை தெரிந்து கொள்ளுங்கள்.!
kaiyil kayiru kattuvathal kidaikum nanmaikal
கையில் கயிறு கட்டுவது நமது வாழ்க்கையில் நமக்கு வரும் தீமைகள் இருந்து விலக உதவுகிறது. உடல் நலம் பாதிக்காமல் இருக்கவும் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும் கருப்பு அல்லது சிவப்பு நிற கயிறு மந்தரித்து கையில் கட்டுவது வழக்கம்.
சில கோவில்களில் இதை பிரசாதம் ஆகவும் வழங்குகின்றனர். இதனால் தான் கோவில்களில் சென்று பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு கயிறுகளை மக்கள் கைகளில் கட்டிக்கொள்கிறேன்.
புதியதாக கருப்பு கயிறு கட்டிக்கொள்ள விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் கட்டிக் கொள்வது நல்லது. பூஜை அறையில் கிழக்கு நோக்கி உட்கார்ந்து கயிறை கட்டிக் கொள்ளலாம்.
சனிக்கிழமைகளில் கருப்பு கயிறு அணிவது நல்லது. இடுப்பு மற்றும் கழுத்தில் அணியும் கயிறுகளில் 9 முடிச்சுகளையும் கால் மற்றும் கைகளில் அணியும் கயிறுகளில் மூன்று முடிச்சுகளும் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முடிச்சை போடும் பொழுதும் ஓம் நமச்சிவாயா என்ற மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு அதனை கட்டிக் கொள்ளலாம்.
சிலர் கோவிலில் கொடுக்கும் கயிறை அல்லது மந்திரிக்கப்பட்ட கயிறை, நிறம் மாறி அதுவே அருந்து விழும் அளவிற்கு கட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அது தவறு.
கைகளில் பாதுகாப்பிற்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ கட்டியிருக்கும் கயிறு 21 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அதன் பயனை முழுமையாக பெற முடியும். கையில் கட்டி இருக்கும் கயிறு 21 நாட்களுக்கு முன்னரே தானாக அவிழ்ந்து விட்டால் அதனை மீண்டும் கட்டக் கூடாது.
English Summary
kaiyil kayiru kattuvathal kidaikum nanmaikal