வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உகந்த நாள்... உகந்த நேரம்...!! - Seithipunal
Seithipunal


வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதையும் திருப்பி கொடுக்கும் வகையில் வசதி வாய்ப்புகள் உருவாகும்.

மனித வாழ்வில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரங்கள் உண்டு. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.

அஸ்வினி நட்சத்திரமும்-மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும்-விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு 'மைத்ர முகூர்த்தம்" என்று பெயர். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும், சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாள் மற்றும் நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பி தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி தரலாம். 

சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

16.06.2020 செவ்வாய்க்கிழமை அதிகாலை 02.00 மணி முதல் 04.00 மணி வரை

02.07.2020 வியாழக்கிழமை மதியம் 03.05 மணி முதல் மாலை 05.05 மணி வரை

13.07.2020 திங்கட்கிழமை நள்ளிரவு 12.12 மணி முதல் அதிகாலை 02.12 மணி வரை

18.07.2020 சனிக்கிழமை காலை 06.08 மணி முதல் 08.08 மணி வரை, மதியம் 12.08 மணி முதல் 02.08 மணி வரை, மாலை 06.08 மணி முதல் இரவு 08.08 மணி வரை

29.07.2020 புதன்கிழமை மதியம் 01.52 மணி முதல் 03.52 மணி வரை

09.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.32 மணி முதல் 12.32 மணி வரை

26.08.2020 புதன்கிழமை மதியம் 12.36 மணி முதல் 02.36 மணி வரை

06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.48 மணி முதல் 10.48 மணி வரை

22.09.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

03.10.2020 சனிக்கிழமை இரவு 07.00 மணி முதல் 08.32 மணி வரை

20.10.2020 செவ்வாய்க்கிழமை காலை 08.12 மணி முதல் 09.38 மணி வரை

30.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 04.45 மணி முதல் 06.45 மணி வரை

31.10.2020 சனிக்கிழமை மாலை 04.49 மணி முதல் 06.49 மணி வரை

16.11.2020 திங்கட்கிழமை காலை 06.08 மணி முதல் 08.08 மணி வரை

27.11.2020 வெள்ளிக்கிழமை மாலை 04.01 மணி முதல் 06.01 மணி வரை

12.12.2020 சனிக்கிழமை காலை 10.46 மணி முதல் மதியம் 12.46 மணி வரை, மாலை 4.46 மணி முதல் 06.46 மணி வரை, இரவு 10.46 மணி முதல் 12.46 மணி வரை

13.12.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 04.23 மணி முதல் 06.23 மணி வரை

24.12.2020 வியாழக்கிழமை மதியம் 03.16 மணி முதல் மாலை 05.16 மணி வரை

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kadan parikaram


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->