கடன் தொல்லை பிச்சு, பிடுங்குதா.?! இந்த ஒரு விஷயம் போதும்.. செவ்வாயை தவற விடாதீர்கள்.!
How to solve loan problem
செவ்வாய்க்கிழமையில் இந்த வழிபாட்டை செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபட முடியும். செவ்வாய்க்கிழமையில் நாம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கும் போது மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது.
கீழ்காணும் வழிபாட்டை செவ்வாய்க்கிழமையில் செய்து வரும்போது நமது கடன் பிரச்சினைகள் விரைவில் தீரும்.
செவ்வாய்க்கிழமை காலையில் 6:00 மணி முதல் ஏழு மணி வரை செவ்வாய் ஓரை என்று கூறுவார்கள். அந்த நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் வெல்லம் கலந்து நம் வீட்டில் இருக்கும் தெய்வம் மற்றும் குல தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு எங்கள் கடனை தீர்ப்பு வாழ்க்கையை மீட்டு தாருங்கள் என்று வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த வழிபாட்டை நிச்சயம் 6 முதல் 7:00 மணிக்குள் காலையில் முடித்து விட வேண்டும்.

இதை செய்ய முடியவில்லை என்றால் மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை பச்சை அரிசி, வெல்லம் மற்றும் பாசிப்பருப்பு மூன்றையும் பூஜை அறையில் வைத்து பூஜித்து எங்கள் கடனை தீர்க்க வழி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டு அதை பசு மாட்டிற்கு வைக்க வேண்டும். யாருடைய பெயரில் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அவர்களது கையால் இந்த பூஜையை செய்ய வைத்து இது மூன்றையும் கலந்து பசு மாட்டிற்கு அவர்கள் கையால் கொடுக்க வேண்டும். இதை கொடுத்துவிட்டு தான் மதிய உணவை நீங்கள் சாப்பிட வேண்டும்.
இதன் பின் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் நெய் தீபத்தில் விளக்கு ஏற்றி வீட்டில் இருக்கும் தெய்வத்தை வணங்கி முருக பெருமானை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் காமாட்சி விளக்கு இருந்தால் அதையும் ஏற்றிக் கொள்ளலாம்.
உங்கள் கடன் பிரச்சினைகளை முழுதாக விட்டு விலகும் வரை இந்த பூஜையை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நீங்கள் செய்யலாம். அல்லது முடிந்த அளவு நாட்களில் இந்த பூஜையை செய்யலாம் ஆனால் செவ்வாய்க்கிழமையில் மட்டும் தான் இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.
English Summary
How to solve loan problem