எந்தெந்த சாமிக்கு என்ன கலர் வேட்டி அணிந்து வழிபட வேண்டும்.?! ஆண்கள் கவனத்திற்கு.! - Seithipunal
Seithipunal


என்னதான் புதுவிதமான உடைகள் அணிந்தாலும், வேட்டி கட்டி நடக்கும்போது ஆண்களிடையே தோன்றும் கம்பீரமே தனி. எல்லாவற்றையும் விட தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடை என்றாலே அது வேட்டி தான்.

தற்போது வேட்டி கட்டி யாரவது சென்றால், ' ஏதாவது பங்ஷனுக்கு போறீங்களா?" என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களிலும், திருவிழாக்களிலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலுமே பார்ப்போர் கண்களுக்காக பாரம்பரியத்தை பறைசாற்றும் வேட்டியில் அத்திப்பூத்தாற் போன்று அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிலர் வேட்டிகளில் தோன்றுவதை காண முடிகிறது.

வேட்டி கட்டுவதால் ஆபத்துகள் விலகி நிற்கும். ஒவ்வொரு வகையான வேட்டிக்கும் வெவ்வேறு வகையான நன்மைகள் உண்டு.

இப்போது எந்த சாமிக்கு எந்த நிற வெட்டி அணியலாம் என்பது குறித்து பார்க்கலாம். 

சிவனை வழிபட கரையில்லா வெள்ளை வேட்டி.

விஷ்ணுவை தரிசிக்க மஞ்சள் நிற வேட்டி.

அம்மனை வேண்ட சிவப்பு நிற வேட்டி.

முருகனை வழிபட பச்சை நிற வேட்டி.

அனுமனை ஜெபிக்க காவி நிற வேட்டி.

ஐயப்பனை வழிபட கருப்பு நிற வேட்டி என ஆன்மிக நேரங்களில் கட்டி வருகின்றனர். வேள்வியின்போது இதே நிற வேட்டிகளுடன் அகன்ற பட்டு கரை வேட்டி அணிவார்கள்.

காட்டுக்குள் வேட்டையாட அல்லது இதர தேவைக்காக செல்லும் ஆண்கள் கருப்பு நிறத்தில் வேட்டி அணிவர். காரணம், கருப்பு நிற வேட்டியை கண்டால் விஷ உயிரினங்கள் அண்டாது என்ற நம்பிக்கை இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to choose color of veshti for all god temple


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->