2022 - 2023 குருபெயர்ச்சி பலன்கள்.. இந்த ராசிக்காரர்களுக்கு பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.! - Seithipunal
Seithipunal


மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 30ஆம் (13.04.2022) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் சுய நட்சத்திரமான பூரட்டாதி மூன்றாம் பாத நட்சத்திரத்தில் இருந்து (கும்ப ராசி), சுய நட்சத்திரமான பூரட்டாதி நான்காம் பாத நட்சத்திரத்திற்கு (மீன ராசி) அதாவது, புதன்கிழமை பின்னிரவு (14.04.2022) வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை 04.09 மணியளவில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் புதன்கிழமை மாலை 03.49 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகி 22.04.2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.

பொறுமை குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே..

இந்த வருட குருபெயர்ச்சியில் இதுவரையில் மீன ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

பலன்கள் :

திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இதுவரை மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி புத்துணர்ச்சியும், தெளிவும் பிறக்கும். குடும்பத்துடன் இணைய நினைத்தவர்களுக்கு எண்ணங்கள் கைகூடும். உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

பொருளாதாரம் :

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும்.

உடல் ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியம் மற்றும் பயணம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு :

சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த தடைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு :

அன்றைய பாடங்களை அன்றே படித்து முடிப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களை குறைத்துக் கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு :

பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு :

விவசாயம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். 

அரசியல்வாதிகளுக்கு :

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். 

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழ்நிலைகள் காணப்படும். உயர்மட்ட மக்களிடத்தில் பிரபலம் அடைவீர்கள். திறமைக்குண்டான விருதுகளும், பாராட்டுகளும் சாதகமாக அமையும். 

நன்மைகள் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியின் மூலமாக மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவமாக மாற்றுவதற்கு உண்டான வாய்ப்புகளும், பெரியோர்களின் அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

கவனம் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. 

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guru Peyarchi 2022 in meena rasi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->