“பதவி பறிப்பு மசோதாஒரு கருப்பு மசோதா".. இந்தியாவை சர்வாதிகார நாடாக்க முயற்சி”.. பதவி பறிப்பு மசோதாவுக்கு ஸ்டாலின் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மக்களவையில் 30 நாட்கள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இந்த மசோதா, 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கொண்ட வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி தானாகவே பறிக்கப்படும் என நிர்ணயிக்கிறது. ஜம்மு-காஷ்மீரையும் உள்ளடக்கிய இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அறிக்கையில் இந்த மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளார். “ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் இந்த மசோதாவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், “130வது அரசியலமைப்பு திருத்தம் சீர்திருத்தம் அல்ல; இது கருப்பு நாள், கருப்பு மசோதா. 30 நாள் கைது = தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி நீக்கம் செய்தல். விசாரணை இல்லை, தண்டனை இல்லை – இது பாஜகவின் கட்டளை மட்டுமே. வாக்குகளைத் திருடுதல், போட்டியாளர்களை அமைதிப்படுத்துதல், மாநிலங்களை பலவீனப்படுத்துதல் – சர்வாதிகாரங்கள் இப்படித்தான் தொடங்குகின்றன” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதோடு, “மோடி ஆட்சியில் இந்தியாவை சர்வாதிகாரமாக மாற்றி, அரசியலமைப்பின் ஜனநாயக அடித்தளங்களை குலைக்க முயற்சி நடக்கிறது. வாக்கு திருட்டு அம்பலமான நிலையில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது அரசியல் எதிரிகளை பொய் வழக்குகளில் சிக்கவைத்து, 30 நாள் கைது என்ற பெயரில் பதவி நீக்கம் செய்யும் ஆபத்தான சட்டம்சமாகும். குற்றம் விசாரணைக்குப் பிறகுதான் நிரூபிக்கப்படுகிறது; வழக்கு பதிவு செய்வதாலோ, கைது செய்வதாலோ அல்ல. எனவே இந்த சட்டம் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்படும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், மத்திய அரசின் புதிய பதவி பறிப்பு மசோதா குறித்து தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில், அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Impeachment Bill is a black bill An attempt to make India a totalitarian country Stalin condemns the Impeachment Bill


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->