"ஊழல் தான் ‘இந்தியா’ கூட்டணி! ஊழலை தவிர வேறுறொன்றுமில்லை!" பதவி பறிப்பு மசோதாவை எதிர்த்த ஸ்டாலினை விளாசும் அண்ணாமலை!
The India alliance is corruption Nothing but corruption Annamalai slams Stalin for opposing the impeachment bill
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை சமீபத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்து நிறைவேற்றியிருந்தார். இந்த மசோதாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் தனது அறிக்கையில், “போட்டியாளர்களை கைது செய்து பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை தன்னிடம் வைத்துக் கொள்வதே சர்வாதிகார வளர்ச்சியின் முதல் படி. இந்த மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது. இது ஒரு கருப்பு நாள், கருப்பு மசோதா, சர்வாதிகாரத்தின் தொடக்கம்” என விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமூக வலைதளத்தில், “வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது உங்கள் அரசின் வெட்கமில்லாத செயல். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்கியது உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்துக்குப் பிறகே திரும்பப் பெறப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “உங்கள் அரசு தொடர்ந்து விசாரணைகளை தாமதப்படுத்த முயன்றது குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் கண்டித்தது. இந்தியா கூட்டணியின் இன்னொரு ஊழல் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் வழக்கில் சிறையில் இருந்தும், பல மாதங்களாக முதல்வர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) ஐ உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அப்போதைய யூ.பி.ஏ அரசு, தங்கள் எம்எல்ஏக்களை காப்பாற்ற அவசரத்தில் ஆணை பிறப்பித்தது. இன்று கூட்டணியின் பெயர் மாறினாலும், நோக்கம் மாறவில்லை. ஊழல் தான் உங்கள் கூட்டணியின் உண்மையான அரசியலமைப்பு” என அண்ணாமலை தாக்கு பிடித்தார்.இதனால், புதிய மசோதாவைச் சுற்றியுள்ள அரசியல் சர்ச்சை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The India alliance is corruption Nothing but corruption Annamalai slams Stalin for opposing the impeachment bill