குருப்பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020.. இந்த மூன்று ராசிக்கு ஜாக்பாட் தான்.!
guru peyarchi 2019 in 3 rasi
நவகிரகங்களில் சுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் குருதேவர் ஆவார். அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு ஒரு வருடம் ஆகும்.
குருபகவான் ஒரு வருடம் முழுவதும் ஒரு ராசியில் இருந்து அந்த ராசிக்கு நின்ற ஆதிபத்தியத்திற்கு ஏற்ப சுப பலன்களை அளிக்கக்கூடியவர்.
மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில், கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ம் (04.11.2019) தேதியன்று பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில், கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருவானவர் தனுசு ராசியில் தனது ஆட்சி வீட்டில் நின்று பல சுபச் செயல்களை இந்த வருடம் அளிக்கவுள்ளார்.
குருதேவர் தான் நின்ற இடத்தை காட்டிலும் தான் பார்க்கின்ற இடத்திற்கு அதிக சுபச் செயல்களை செய்யக்கூடியவர். குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து 5, 7 மற்றும் 9 ஆகிய ராசிகளை பார்வையிடுகிறார்.
தனுசு ராசியில் இருந்து குருதேவர்
ஐந்தாவது பார்வையாக மேஷ ராசியையும்
ஏழாவது பார்வையாக மிதுன ராசியையும்
ஒன்பதாம் பார்வையாக சிம்ம ராசியையும்
இந்த வருடம் முழுவதும் பார்வையிட இருக்கின்றார்.
இந்த மூன்று ராசிகளுக்கும் இந்த வருடம் சுபச் செயல்கள் தொடர்பான காரியங்கள் அவரவர்களின் ஜென்ம ஜாதகங்களில் நடைபெறும் திசாபுத்திகளுக்கு ஏற்ப கைக்கூடி நல்ல பலனை அளிக்கும்.
English Summary
guru peyarchi 2019 in 3 rasi