ஆன்மீக ரகசியங்கள்... செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டினால் ஏற்படும் நன்மைகள்.!  - Seithipunal
Seithipunal


* செவ்வாய்க்கிழமை நாட்களில் முருகப்பெருமானின் தரிசனம் செய்தால் கடன்கள் தீரும். பலரும் கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு முடிவுகளை எடுக்கின்றனர். சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாததால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

* அனைவரது வாழ்க்கையிலும் நன்மை தீமை என இரண்டும் இருப்பது இயல்பு. சிலர் கடனை அடைக்க முடியாமல் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை மனதார வழிபடுவதால் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். 

* முருகப்பெருமான் கடன் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண அருள் புரிவார் செவ்வாய்க்கிழமை நாட்களில் கடன் பிரச்சினைகள் பணி தொடர்பான பிரச்சனைகளை நினைத்து முருக பெருமானை வழிபடலாம். 

* அன்றைய நாளில் முருகனுக்கு செய்யும் வழிபாடு பூஜைகளுக்கு ஆற்றல் அதிகம் என்பது ஐதீகம். கோதுமையை வாங்கி அலசி காய வைத்து அதனை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடைகளில் கோதுமை வாங்கி வீட்டில் அரைப்பதால் நாம் செய்யும் பரிகாரம் மூலம் கூடுதல் பலன் கிடைக்கும். 

* கோதுமை மாவு சம அளவிற்கு சர்க்கரை எடுத்து இரண்டும் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். குறைந்தது 40 உருண்டைகள் அளவிற்கு வேண்டும். 

* செவ்வாய்க்கிழமை நாட்களில் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு இந்த உருண்டைகளில் ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடி உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நினைத்து முருகப்பெருமானை வழிபட்டு உங்களது தலை முதல் கால் வரை வலப்புறமாக மூன்று முறை சுற்றி கொள்ளுங்கள்.

* பிறகு நீங்கள் வெளியில் செல்லும் பொழுது புற்று போன்றவற்றிற்கு இந்த உருண்டையை வைத்து விடலாம் அல்லது தண்ணீர் ஓடும் இடங்களில் இதனை கரைத்து விடலாம். முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் தரிசிப்பது பலவிதமான நன்மைகளை தரக்கூடியதாக இருந்தாலும் மனதார முருகனை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

God Murugan Praying Spiritual Benefits


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->