எந்த பொருளை எல்லாம் தானம் செய்யலாம்.? என்னென்ன நன்மைகள் உண்டாகும்? - Seithipunal
Seithipunal


மகாளய பட்ச புண்ணிய காலமான இந்த 15 நாட்களும் பித்ருக்கள் எனப்படும் முன்னோருக்கு உரிய நாட்கள் ஆகும். இந்த நாட்களில், முன்னோரை நினைத்து நாம் செய்யும் தானங்கள், மிகுந்த புண்ணியங்களைத் தரும். மேலும் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்யும்.

எனவே, நடந்து கொண்டிருக்கும் மகாளய பட்ச காலத்தில், ஒவ்வொரு நாளும் ஏதேனும் தானம் செய்ய வேண்டும். என்னென்ன தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம்...

அன்னதானம் :

இந்த காலக்கட்டத்தில், அன்னதானம் செய்வதால், வறுமை நீங்கும் மற்றும் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஆடை :

இறந்த நம் முன்னோர்களை நினைத்து வயதானவர்களுக்கு, ஏழைகளுக்கு, ஆச்சார்யர்களுக்கு வேஷ்டி, புடவை முதலான ஆடைகளை தானம் செய்வதால், நமக்கும் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கியம் பெருகும், தரித்திரம் விலகும் மற்றும் ஆயுள் அதிகரிக்கும்.

தேன் :

நீண்டகாலமாக புத்திர பாக்கியம் இல்லையே என வருந்துவோர், முடிந்த அளவு ஐந்தாறு பேருக்கு தேன் வழங்க வேண்டும். இதனால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

விளக்கு :

அகல்விளக்கு, காமாட்சி விளக்கை தானமாக வழங்கினால், இல்லத்திலும், உள்ளத்திலும் இருந்த இருள் விலகும். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

அரிசி :

அரிசி தானம் செய்வதால், தனம், தானியம் பெருகும். நாம் இதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். 

பழங்கள் :

பழங்களை தானம் செய்வதால், தெளிவு பிறக்கும் மற்றும் ஞானமும், யோகமும் கிடைக்கப் பெறுவோம்.

பசு :

பசுவை தானம் செய்வது ரொம்பவே விசேஷம். இதுவரை இருந்த பித்ருக்கடன் அடையும். பித்ரு தோஷங்கள் யாவும் விலகும். பித்ருக்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைத்து, சந்ததி பல்கிப் பெருகுவார்கள்.

பால் :

பால் தானம் செய்வதால், கவலைகள் அனைத்தும் விலகிவிடும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

தங்கம் :

தங்கம் தானம் செய்தால், குடும்பத்தில் உள்ளவர்களின் அனைவரது தோஷமும் விலகிவிடும். பித்ருக்களின் ஆசி கிடைக்கப் பெற்று, சகல ஐஸ்வர்யங்களுடன் வாழலாம்.

தேங்காய் :

தேங்காய் தானம் செய்தால், நினைத்தது நிறைவேறும். அனைத்தும் காரியங்களிலும் வெற்ற கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

endha porulai dhaanam seiyalaam?


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->