வாழ்வை வளமாக்கும் துர்கை அம்மன் வழிபாடு.. எந்தெந்த கிழமைகளில் எப்படி துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்..!
Durga Amma WorkShip
துர்கை என்றால் துர் சக்திகளை அழிப்பவள் என பொருள். துர்கை வழிப்பட்டு வர நம் வாழ்வின் துன்பங்கள் நீங்கி மகிழ்வான வாழ்வளிப்பாள். அன்னை துர்கையை எப்படி வழிப்படுவது என பார்போம்.
ஞாயிறு:
ஞாயிற்று கிழமைகளில் மாலை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளை துணியில் திரி விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து வழிப்பட்டு வர குடும்பத்தில் வறுமை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
திங்கள்:
காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண்பொங்கலை படைத்து வழிப்பட்டு வர உடல்நலம் சீராகும். கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்:
ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி வழிப்பட்டு தக்காளி சாதம் நெய்வேதியமாக படைக்க வேண்டும். இந்த வழிப்பாட்டால் மாங்கல்யம் பலம் பெறும், குழந்தை பாக்கியம் கிட்டும்.
புதன்:
மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சு திரியில் விளக்கேற்றி புளியோதரை நெய்வேய்தியம் வைத்து வழிபாடு செய்து வர உத்யோகத்தில் பதவி உயர்வு கிட்டும் ஆரோக்கியம் பலப்படும்.

வியாழன்:
மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி எலுமிச்சை சாதம் வைத்து வழிப்பட்டு வர தொழில் வளர்ச்சி பெறும்.
வெள்ளி :
இந்த கிழமைகளில் விரதம் இருந்து காலை 10.30 மணி முதல் 12 (ராகு காலம் ) துர்க்கையை வழிபட வேண்டும். ராகு கால நேரத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைத்து வழிப்பட்டு வர தீராத துன்பங்கள் நீங்கும்.
சனி:
காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி காய்கறி சாதத்தை நெய்வேதியமாக படைத்து வழிபட உடல் நலம் மேம்படும்.
தினமும் நீராடி சுத்தமான ஆடையை உடுத்தி பூஜை அறையில் விளக்கேற்றி வழிப்பட்டு வர நேர்மறை எண்ணங்களையும் நேர்மறை சக்திகளையும் அதிகரிக்க உதவும்.