அந்தரத்தில் தொங்கும் தூண்; ஏழு அதிசயங்கள் கொண்ட சிவன் கோவில்; சீதாதேவி கால்பட்ட இடத்தில் வற்றாத நீர்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பார்ப்பவர்கள் பிரமித்து போகும் அளவுக்கு பல வித்தியாசமான கட்டிடக்கலை, அதிசயங்கள், அமானுஷ்யங்கள் நிறைந்த பல கோவில்களை நாம் பார்த்திருப்போம். கேள்விபட்டு இருப்போம். அப்படி ஒரு கட்டிலையில் சிறந்த ஒரு கோவில் பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வீரபத்ரர் திருக்கோயில். லேபாக்ஷி என்ற ஊரில் அமைந்துள்ள ஏழு அதிசயங்களைத் தன்னகத்தே அடக்கியுள்ள இந்த கோவில், 16-ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசால் கட்டப்பட்டது. சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரருக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளமை சிறப்பம்சம். அதிலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவன் சிலையும், உலகிலேயே பெரிய நந்தியும் இங்கு இருப்பது கூடுதல் விசேஷம்.

இந்த கோவில் பற்றி பல வரலாறுகள் உள்ளன. அதில் ஒன்று இராமாயணத்தில் அசுரன் ராவணன், சீதா பிராட்டியை கடத்தி செல்லும் போது, ஜடாயு பறவை அவனை தடுத்ததாகவும், அப்போது ராவணன் அதை வெட்டி வீழ்த்தியதாகவும், பின்பு ஸ்ரீராமர் அந்தப் பறவையிடம் எழுந்திருக்கும்படி கூறியதாகவும் வரலாறு.

அதாவது தெலுங்கில், ‘லெ’ என்றால் எழுந்திரு என்றும், பக்ஷி என்றால் பறவை என்றும் பொருள்.ஆதலால்  இந்த ஊருக்கு லெபாக்ஷி என்ற பெயர் வர காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் மிக அதிசயமான ஒன்று உள்ளது. அதாவது இங்கு உள்ள 70 தூண்களில் ஒரு தூண் மட்டும் தரையில் படாமல் அந்தரத்தில் தங்கியபடி இருப்பது.

இது உண்மையா..? பொய்யா..? என  உறுதி செய்ய பலரும் துணி மற்றும் பேப்பரை தூணுக்கு அடியில் ஒரு புறம் நுழைத்து மறுப்புறம் எடுக்கிறார்கள். இது நமது கண்ணை நம்மளாலே நம்ப முடியாத அதிசயம் என்று சொல்லலாம். இந்த தூணுக்கு அடியில் இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இத அறிந்த பிரிட்டிஷ் இஞ்சினியர் ஒருவர் இந்தத் தூணின் ரகசியத்தை தெரிந்து கொள்ள முற்பட்டு தோற்றுப் போனார். இந்தத் தூண் மட்டும் எப்படி அந்தரத்தில் நிற்கிறது என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இந்தத் தூணை, ‘ஆகாய தூண்’ என்றும் அழைக்கிறார்கள். இந்தக் கோயிலை, ‘கூர்மசைலம்’ என்னும் மலை மீது கட்டியிருக்கிறார்கள். அதாவது மலை பார்ப்பதற்கு ஆமை போலவே அமைந்திருப்பதால் இந்தப் பெயர் வர காரணமாயிற்று.

இந்தக் கோயிலில் இருக்கும் நந்தி 20 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்டது. மற்ற கோயில்களில் உள்ள நந்தி சிலைகளை விட இந்த நந்தியின் தலை சற்று தூக்கிய வண்ணம் இருக்கும். இந்த நந்தி சிலைதான் உலகிலேயே இரண்டாவது பெரியதாகும். இது ஒற்றைக் கருங்கல்லால் ஆனது என்பது இன்னொரு சிறப்பு.

விசயநகர பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவில் இவர்களில் கட்டிடக் கலைக்கும், வரைகலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது. இங்கு காணப்படும் வரைகலையை அடிப்படையாக வைத்தே பல சேலைகளின் வரைகலைகள் உருவாக்கப்படுகின்றன என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளது. பல தூண்களுடன் நாட்டிய மண்டமும், கர்ப்பக்கிருகமும் அமைந்துள்ளது. 

இந்த நாட்டிய மண்டபத்தில் தேவலோக கண்ணியர்களான அரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலின் பின்புறம் ஏழு தலையுடம் கூடிய பிரமாண்டமான நாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி தன் தாய் மதிய உணவு சமைப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாறு கூறுகிறது. 

இக்கோவிலில் சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போதும் நீர் வற்றாமல் இருப்பதைக் காணமுடிகிறது. இக்கோயிலின் கருவறைச் சுவரிலும், கோயில் மண்டபங்களின் விதானங்களில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சிவன் குறித்த ஓவியங்களும், மனுநீதிச் சோழனின் வாழ்க்கையை விளக்கும் வகையில் நீதிவடங்கன் கன்றுக்குட்டியை தேர்காலில் ஏற்றி கொல்லுதல், பசு ஆராய்ச்சி மணியை அடித்தல், சோழன் வந்து விசாரித்தல், சோழன் தன் மகனை தேர்காலில் ஏற்றி கொல்லுதல், சிவபெருமான் நீதிவிடங்கனையும், கன்றுக்குட்டியையும் உயிர்பித்து, சோழனுக்கு ஆசிவழங்குதல் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இத்தளம் ஆந்திர மாநிலத்தில் இருந்து கருநாடகம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து 140 கிலோ மீற்றர்கள் தொலைவில் ஆந்திர மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know the Shiva temple with a pillar standing in the middle


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->