ஆன்மிக ரகசியங்கள்... சித்திரை அமாவாசை வழிபாடு பயன்கள்!  - Seithipunal
Seithipunal


ஆடி தை மற்றும் ஐப்பசியில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படும். இந்த அமாவாசைகளில் பித்துருக்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை நாம் பெறுவோம். 

மாதம் மாதம் வரக்கூடிய ஒவ்வொரு அமாவாசை நாளிலும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். ஆனால் ஆடி, ஐப்பசி, தை ஆகிய மூன்று மாதங்களில் வரக்கூடிய அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்குவது மிகவும் சிறப்பானது. 

இந்த மூன்று மாதங்களை தவிர தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

2024 ஆம் ஆண்டு சித்திரை அமாவாசை நாளை காலை 11:18 மணிக்கு துவங்கி நாளை மறுநாள் காலை 9:19 மணி வரை இருக்கும். இந்த நாளில் நமது முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுக்கலாம். 

ஆனால் நாளை மறுநாள் காலை நேரத்தில் அமாவாசை இருந்தாலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. மே 7ஆம் தேதி அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. 

சித்திரை மாதம் பல்வேறு நல்ல காரியங்களுக்கு உகந்த மாதங்களாக அமையும். இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து திதிக்கும் நிறைய சிறப்புகள் உள்ளது. சித்திரை மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் படைத்து வழிபட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு போன்றவை சிறந்து விளங்கும். 

அமாவாசை அன்று உணவு உடை போன்றவற்றை தானமாக வழங்குவது நல்லது. சித்திரை மாதத்தில் தான் சூரிய பகவான் சரியாக கிழக்கு திசையில் உதிக்கும். 

சித்திரை மாத அமாவாசையில் நவகிரக வழிபாடு மிகவும் நிம்மதி கொடுக்கும். சித்திரை மாத அமாவாசையில் விரதம் இருந்து சூரிய பகவானுக்கு நீரிட்டு வழிபட்டால் சூரிய பகவானின் பலன் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chithirai month amavasai viratham


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->