சக்ஸஸ் ஆன ஆபரேஷன் சிந்தூர் - மத்திய அமைச்சர்களின் எக்ஸ் தளத்தில் பதிவாகும் ஜெய்ஹிந்த்.!!
union ministers upload jaihind in x pages
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்றதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே, இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இதேபோல், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு உள்பட ஏராளமானோர் தங்களது எக்ஸ் வலைதளங்களில் ஜெய்ஹிந்த் என்ற வாசகங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
union ministers upload jaihind in x pages