Operation sindhoor: டெல்லியில், இன்று மத்திய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது...!
Operation Sindhoor In Delhi Union Cabinet is meeting urgently today
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான்-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதில் இந்தியா, கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.இந்த திடீர் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இதில் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகம், இன்று காலை 10 மணிக்கு ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையை அடுத்து, இன்று மத்திய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்திய மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.போர் முனைப்பில் இந்தியா.
English Summary
Operation Sindhoor In Delhi Union Cabinet is meeting urgently today