Operation Sindhoor : இந்திய ராணுவம் எந்தெந்த பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது?
Operation Sindhoor Which terrorist organization camps did Indian Army attack
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் -பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற பெயரில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் இந்தியா, கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த திடீர் தாக்குதலில் இந்திய ராணுவம், 'பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை' என உறுதிப்படுத்தியது.
பாதுகாப்பு அமைச்சகம், இன்று காலை 10 மணிக்கு ''ஆப்ரேஷன் சிந்தூர்'' நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 4 முகாம்கள், லஷ்கர் இ தொய்பாவின் 3 முகாம்கள், ஹிஸ்புல் முஜாகிதினின் 2 முகாம்கள் மீது, இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.இதில் 9 பயங்கரவாதிகளும் ,இந்திய ராணுவத்திலிருந்து 3 பேர் இறந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.இதைப் பற்றிய முழு விவரம் இனிதான் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Operation Sindhoor Which terrorist organization camps did Indian Army attack