ஆயுத பூஜை என்றால் என்ன? இன்று எந்த தெய்வங்களை வழிபட வேண்டும்.! - Seithipunal
Seithipunal


ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது ஏன்?

நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றை கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

இந்த நாளே ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை என்றால் என்ன?

நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை.

துர்க்கை அம்மனுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மகிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்க்கை. இந்த நாளையே துர்க்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர். 9 நாட்கள் சண்டை, மகிஷாசுரன் வதத்துடன் வெற்றிப்பெறுவதால் 10வது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகின்றோம்.

ஆயுத பூஜை வழிபாடு :

நவராத்திரியின் 8வது நாளுக்கு பிறகு, 9வது நாளில் அனைத்து ஆயுதம், உலோகங்களால் ஆன பொருட்கள், வாகனம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இயந்திரங்கள் என அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

சரஸ்வதி பூஜை வழிபாடு :

பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் புத்தகம், பேனா, பென்சில் என அனைத்தையும் சாமி படம் முன்பு வைத்து நான்கு முனைகளிலும் மஞ்சள் பொட்டு வைத்து வழிபடுவார்கள்.

இந்த நாளில் வழிபட வேண்டிய தெய்வங்கள் :

ஆயுத பூஜையன்று அறிவாற்றலை வழங்கும் சரஸ்வதி தேவி

தூய்மை உள்ளத்தை வழங்கும் பார்வதி தேவி மற்றும்

செல்வ செழிப்பை அளிக்கும் லட்சுமி தேவி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayudha pooja 2021 special 2


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->