சனிப்பெயர்ச்சி... அஷ்டம சனி என்ன செய்யும்?... வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


கண்டகச் சனி :

சனிதேவர் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டகச் சனியாகும்.

இந்த காலக்கட்டத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது.

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத்தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பகை ஏற்படும்.

அஷ்டமச் சனி :

சனிதேவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையே அஷ்டமச் சனியாகும்.

இந்த காலக்கட்டத்தில் நோய்களும், விபத்துகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

அதுமட்டுமின்றி வீண் பழிகளும், அவமானமும் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் இருக்காது.

மேலும், புதிய முயற்சிகள் தோல்வியைத் தர வாய்ப்புண்டு. 

உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. திறமைக்கேற்ற மதிப்பு இருக்காது. மேல் அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அவர்களுடன் வம்பு போன்ற கசப்பான நிகழ்வுகள் நடைபெறும்.

மத்திம சனி :

ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது மத்திம சனியாகும்.

அஷ்டமச் சனி அளவிற்கு மத்திம சனி பாதிப்புகளை ஏற்படுத்தாது.

ஓரளவு வருமானம் கிடைக்கும். ஒப்பந்த தொழிலில் மேன்மை உண்டாகும்.

தந்தையுடனான உறவில் மனக்கசப்புகள் உண்டாகும். 

பூர்வீகச் சொத்துக்கள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ashtama sani


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->