விருப்பத்தை நிறைவேற்றும் எட்டாம் நாளான நரசிம்மி பூஜை..! நவராத்திரி 8ஆம் நாள் வழிபாடு.! - Seithipunal
Seithipunal


அம்மன் வடிவம் : நரசிம்மி.

நரசிம்மி வடிவம் : நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள்.

பூஜையின் நோக்கம் : ரத்த பீஜன் தேவியால் வதம் புரிய செல்லுதல்.

நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள்.

எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.

தாமரை ஆசனத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள்.

தென்னாட்டில் எட்டாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஆசுரி துர்க்கை.

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுத்ததும் அந்த அமிர்தத்தை அசுரர்களுக்கு அளிக்காமல் தேவர்கள் மட்டும் பருகிடச் செய்ய வேண்டும் என எண்ணினார் திருமால்.

மோகினி வடிவம் தரித்து அசுரர்களை மயக்கி அந்த அமிர்த கலசத்தை தேவர்களுக்கு அளிக்கும் ஆற்றலை திருமாலுக்கு வழங்கியவள் துர்க்கை ஆவாள். இதனால் அவள் ஆசுரி துர்க்கை என்று போற்றப்படுகிறாள்.

நவராத்திரி ஏன் கொண்டாடுகிறோம்?... எப்படி உருவானது?...நவராத்திரி உருவான  கதை...! - Seithipunal

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : பன்னீர் இலை

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : ரோஜா 

அன்னையின் அலங்காரம் : கருணை துர்க்கை அலங்காரம்

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : இளம் பச்சை

கோலம் : காசு கொண்டு பத்ம கோலம் போட வேண்டும்.

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : வாசனை மலர்கள்.

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 9 வயது 

நைவேத்தியம் : பாயசம்

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : முறுக்கு 

பாட வேண்டிய ராகம் : புன்னாகவராளி 

நடனம் : கும்மி

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : பயத்தை போக்கும்.

பலன்கள் : மனதில் வேண்டியவற்றை அருளக்கூடியவள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8th day narasimmi poojai 2022


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->