இன்றைய ராசிபலன்கள்... எந்த ராசிக்கு வரவு?... எந்த ராசிக்கு செலவு? - Seithipunal
Seithipunal


மேஷம்:

நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனதில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்:

செயல்களின் தன்மைகளை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அலுவலக ரீதியாக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மிதுனம்:

பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். அசதியான நாள்.

கடகம்:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  வாழ்க்கைத்துணையுடன் நல்லுறவு நீடிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

கன்னி:

பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். வேலை விஷயமாக நல்ல செய்திகள் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.  நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். கவனம் வேண்டிய நாள்.

துலாம்:

பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் உண்டாகும்.  வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் சாதகமாகும். பயணம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.  பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.  தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

தனுசு:

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. சிந்தனைகளில் கவனம் வேண்டிய நாள்.

மகரம்:

மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்வீர்கள். முயற்சிகள் நிறைந்த நாள்.

கும்பம்:

நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூழல் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணம் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவான நாள்.

மீனம்:

அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். மனதில் எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். தொழில் ரீதியான நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில்  விழிப்புணர்வு வேண்டும். சுபமான நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

21 dec rasipalan


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->