இன்றைய (10-08-2022) ராசி பலன்கள்.. யாருக்கு சேமிப்பு உயரும்?.. யாருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.? - Seithipunal
Seithipunal


மேஷம்

வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். சிந்தனையின் போக்கில் புதுமை உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அஸ்வினி : நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : புதுமை உண்டாகும்.

ரிஷபம்

பணியில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். சமூக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும்.

ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.

மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.

மிதுனம்

சிறு மற்றும் குறுந்தொழிலில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.

புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.

கடகம்

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழல் அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சமூக நிகழ்வுகள் மனதளவில் சில மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : ஆசைகள் உண்டாகும்.

பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.

ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

சிம்மம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. எதிராக செயல்பட்டவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரிடத்தில் தேவையற்ற கோபத்தை குறைத்து கொள்ளவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு நன்மையை ஏற்படுத்தும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மகம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

பூரம் : புரிதல் உண்டாகும்.

உத்திரம் : நன்மையான நாள்.

கன்னி

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : புரிதல் உண்டாகும்.

அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

சித்திரை : குழப்பம் நீங்கும்.

துலாம்

வியாபார பணிகளில் வசதிகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். புத்திசாலிதனத்தை வெளிப்படுத்தி லாபத்தை மேம்படுத்துவீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். மறைமுக வருமானம் சிலருக்கு உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை : வசதிகள் அதிகரிக்கும்.

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : விருப்பம் நிறைவேறும்.

விருச்சிகம்

உடலில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளால் ஆதாயம் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.

அனுஷம் : திருப்தி ஏற்படும்.

கேட்டை : ஆதாயம் மேம்படும்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.  வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூராடம் : பொறுமையை கடைபிடிக்கவும்.

உத்திராடம் : மதிப்பு அதிகரிக்கும்.

மகரம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளையும், அறிமுகத்தையும் பெறுவீர்கள். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.

அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

கும்பம்

நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். விவேகமான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : பயணங்கள் கைகூடும்.

சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : மதிப்பு மேம்படும்.

மீனம்

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரேவதி : இன்னல்கள் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10.08.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->