இன்றைய (07-05-2022) ராசி பலன்கள்.. யாருக்கு லாபம்.. யாருக்கு வெற்றி.? - Seithipunal
Seithipunal


மேஷம்

தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் அனுகூலமாக செயல்படுவார்கள். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விருத்தி நிறைந்த நாள்.

ரிஷபம்

புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத இடமாற்றத்தால் புதிய அனுபவம் உண்டாகும். நன்மையான நாள்.

மிதுனம்

எதிலும் தைரியத்துடன் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய ஆராய்ச்சி தொடர்பான தேடல் உண்டாகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கையின் மூலம் சேமிப்பு குறையும். விவாதங்களில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். அமைதி வேண்டிய நாள்.

கடகம்

நண்பர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும். போட்டி நிமிர்த்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். தடைகள் நிறைந்த நாள்.

சிம்மம்

நண்பர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும். லாபகரமான நாள்.

கன்னி

விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். இறை வழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

தனுசு

மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வேகத்தை விட விவேகம் அவசியமாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். வெற்றிகரமான நாள்.

மகரம்

புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கேளிக்கைகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

கும்பம்

உத்தியோக பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதரவும், ஆதாயமும் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். சோர்வு நிறைந்த நாள்.

மீனம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

07.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->