ஜவான் பாடலுக்கு நடனமாடும் பெண் நோயாளி - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஜவான் பாடலுக்கு நடனமாடும் பெண் நோயாளி - வைரலாகும் வீடியோ.!

அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், வெளிவந்து வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ராமய்யா... வஸ்தாவையா..., சலேயா உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்டா பிரபலங்களில் ஒருவரான பிரிஷா டேவிட் சலேயா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும், ஷாருக்கானுக்கு சுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று தலைப்பிட்டு, குணமடைந்து மீண்டு வர ஷாருக்கானின் ஜவான் பட பாடல்கள் பெரிதும் உதவின என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரிஷா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அணிய கூடிய கவுன் அணிந்து காணப்படுகிறார்.

இந்த வீடியோ ஷாருக் கான் கவனத்திற்கு சென்றுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதில் பதிவில், "இது மிக நன்றாக உள்ளது. நன்றி. விரைவில் குணமடைந்து வந்து படம் பார்க்கவும். நீங்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து நடனம் ஆடும் மற்றொரு வீடியோவை காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman patient dance jawan movie song vedio viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->