வாட்ஸ்அப் செயலியில் வாக்கெடுப்பு நடத்தும் புதிய சேவை அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வரவுள்ளது. 

இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் கருத்துக்கணிப்பு எடுக்க வாக்கெடுப்பு நடத்தும் வசதி விரைவில் வாட்ஸ்அப்பிலும் வர உள்ளது.

வாக்கெடுப்பு அம்சத்தின் முந்தைய பதிப்பு, ஒரு குழுவில் கருத்துக் கணிப்புகளை உருவாக்க பயனர்களை அனுமதிக்கிறது. ஆனால், சமீபத்திய புதுப்பிப்பு தனிப்பட்ட அரட்டைகளுக்கு இந்த திறனைக் கொண்டுவருகிறது. மற்றும் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்கணிப்புகளை உருவாக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp poll service New update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->