கர்நாடகாவில் தீவிர தேர்தல் பிரச்சாரம்... 'தோசை' சுட்டு மகிழ்ந்த பிரியங்கா காந்தி.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அம்மாநிலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வருகின்ற மே மாதம் பத்தாம் தேதி நடைபெற இருக்கிறது. அங்கு இருக்கும் 222  சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சியின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அங்குள்ள உணவகம் ஒன்றில் அவர் தோசை சுட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரம்பரியமிக்க மயிலாரி உணவகத்தில் நிர்வாகிகளுடன் தோசை சுட்டு மகிழ்ந்தேன். இது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. கடினமான உழைப்பு கொண்டு இயங்கும் அந்த நிறுவனம் உழைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு என பதிவிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viral video of Priyanka Gandhi enjoying roasting dosa during election campaign


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->