செத்தும் கொடுத்தார் சீதக்காதி! இது கதையல்ல….! உண்மைச் சம்பவம்….! - Seithipunal
Seithipunal


செத்தும் கொடுத்தார் சீதக்காதி! இது கதையல்ல….! உண்மைச் சம்பவம்….!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் வசித்தவர், சீதக்காதி. இவர் மிகப் பெரிய வணிகர். மரக்கலம் கொண்டு, அயல் நாட்டு வாணிபம் செய்தார். அதனால், மரைக்காயர் என்றழைக்கப் பட்டார்.

செல்வந்தராக இருந்தாலும், ஈகை குணம் மிகுந்தவர், சீதக்காதி. அதனால், வள்ளல் என்ற அடைப் பெயரை மக்களே அவருக்கு வழங்கினார்கள். சீராப்புராணம் எழுதிய உமறுப் புலவருக்கு பொருள் தந்து ஊக்குவித்தார்.

அவர் மட்டுமல்ல. எண்ணற்ற, கவிஞர்களின் திறமை அறிந்து, அவர்களின் வறுமை நீங்க உதவினார். அவரிடம், படிக்காசுப் புலவர் சென்று, தன் வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். ஒரு வாரம் கழித்து தன்னை வந்து பார்க்கச் சொன்னார், சீதக்காதி.

படிக்காசுப் புலவரும் நம்பிக்கையுடன் சென்றார். ஒரு வாரம் கழித்து, அவரைப் பார்க்கச் சென்றார். சீதக்காதியின் வீட்டின் முன்பாக பலர் சோகமாக அமர்ந்திருந்தனர். அந்த அசாதாரண சூழ்நிலையைக் கண்டு துணுக்குற்ற புலவர், என்ன விபரம்? என்று கேட்ட போது, இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தான், திடீரென்று மரணமடைந்தார் சீதக்காதி, என்ற செய்தி, அவர் தலையில் இடியாய் இறங்கியது.

அவர் கதறி அழுதார். அவரை, வீட்டிற்குள் அழைத்துச் சென்ற, சீதக்காதியின் உறவினர், வீட்டிற்குள் சென்று ஒரு பொருளை எடுத்து வந்தார்.

அது சீதக்காதி, தன் கையில் எப்போதும் அணிந்திருந்த மாணிக்க மோதிரம். அதைப் படிக்காசுப் புலவரிடம் தந்து, “வள்ளல் சீதக்காதி, இறக்கும் தருவாயில், உங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்ததைப் பற்றிச் சொன்னார். நீங்கள் வந்தால், உங்களிடம் கொடுக்கச் சொல்லி, இதைக் கொடுத்தார்” என்று, அந்த மாணிக்க மோதிரத்தை அவரிடம் கொடுத்தனர்.

இப்போதும் புலவர் கதறி அழுதார். இப்படி ஒரு வள்ளலை, இறைவன், வேகமாக அழைத்துக் கொண்டான, என்று !

கீழக்கரையில், இன்றும் அவர் கட்டிய மசூதி, சீதக்காதியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறது.

மதுரை ராஜா -


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vallal seethakathi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->