மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா பிரச்சனை மீண்டும் சூடுபிடிக்கிறது! யார் விட்டு சென்றாலும் சத்தியமாக அப்படி இருப்பேன்.. ஜாய் கிரிஸில்டா பதிவு!
The Madhampatti Rangaraj Joy Grisilda issue is heating up again I will honestly be the same no matter who leaves Joy Grisilda post
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவியாக அறிமுகமான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இடையிலான தனிப்பட்ட சர்ச்சை மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ஜாய் கிரிஸில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து, கர்ப்பமாக்கி பிறகு ஏமாற்றிவிட்டார்” என்று குற்றஞ்சாட்டி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, ஜாயிடம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் ஆறு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாய்,“என்னை மிரட்டவோ, புகாரை வாபஸ் பெறச் சொல்லவோ யாரும் வரவில்லை.
என் குழந்தைக்கு மிரட்டல் இருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். அதற்கான பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். இது மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைதான்.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.குழந்தைக்காக எந்த நிலைக்கும் சென்று போராடுவேன்,”என்று கூறினார்.
ரங்கராஜிடம் எப்போது விசாரணை நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது கர்ப்பமான வயிற்றுடன், ரங்கராஜுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து,“ராஹா ரங்கராஜ், உனது தந்தை உன்னை விட்டு சென்றாலும்,என் இதயம், ஆன்மா, கைகள் – அனைத்தும் உனக்கு முதல் வீடாக இருக்கும்.இது என் சத்தியம்.வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை நாங்கள் சோதிக்கவில்லை.எங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்பது ரங்கராஜின் விருப்பம்.ஆனால் குழந்தை பிறக்கும் முன்பே தந்தையை காணவில்லை,”என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.
ஜாய் கிரிஸில்டாவின் புகார் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.இப்போது அனைவரின் கவனமும் மாதம்பட்டி ரங்கராஜிடம் போலீசார் எப்போது விசாரணை நடத்துவார்கள் என்பதில்தான் உள்ளது.
இந்த தனிப்பட்ட பிரச்சனை தற்போது பொதுவாக பேசப்படும் முக்கியச் செய்தியாக மாறியுள்ளதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
The Madhampatti Rangaraj Joy Grisilda issue is heating up again I will honestly be the same no matter who leaves Joy Grisilda post