கரூர் சம்பவம் – துளியும் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய்..விஜயின் வீடியோவுக்கு மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கடும் பதில்! - Seithipunal
Seithipunal


கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த துயர சம்பவத்தைச் சுற்றி அரசியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தவெகவினர், இது சதி காரணமாக நடந்தது என கூறியபோதும், அரசு தரப்பில் “விஜய் தாமதமாக வருதல் மற்றும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் போலீஸ் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததே காரணம்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் மௌனமாக இருந்த நடிகர் விஜய், பின்னர் ஒரு விளக்க வீடியோ வெளியிட்டார். அதில்,“நான் ஐந்து மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தேன். ஆனால் கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு உண்மையெல்லாம் தெரியும். கரூர் மக்களின் கூற்று கடவுள் நேரில் வந்து சொல்வது போல இருந்தது. உண்மை விரைவில் வெளிவரும். எங்கள் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், சமூக வலைதள பயனாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து கைது செய்கிறார்கள். சிஎம் சார், என்மீது பழிவாங்க விரும்பினால் என்னைச் செய்யுங்கள். நான் வீட்டிலோ அலுவலகத்திலோ இருப்பேன்” என்று கூறினார்.

இந்த வீடியோவுக்கு கடும் எதிர்வினையாக மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் பதிலளித்தார். அவர் கூறுகையில்,

“கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று துளியும் மனசாட்சியின்றி விஜய் கேட்கிறார். மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞன் உயிரிழந்தான். நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், 4 பேர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டனர். விக்கிரவாண்டியில் 400-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்; நல்ல வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை. கரூரில் இவை எல்லை மீறிச் சென்றது.

ஆனால் விஜய் கொஞ்சமும் பொறுப்புணர்வின்றி பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ், பாஜகவை விட பத்து மடங்கு ஆபத்தானவர் விஜய்” என விமர்சித்தார்.கரூர் நெரிசல் சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் இன்னும் பெரும் விவாதமாகவே நீடித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur incident ​​Vijay asks without any conscience Senior journalist Senthil Vel gives a strong response to Vijay video


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->