காசா போர்நிறுத்தம்..காலக்கெடு விதித்த டிரம்ப்..ஹமாஸ் நிலைப்பாடு என்ன?
Gaza ceasefire Trump imposes a time limit What is Hamas stance?
காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார்.ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்குமோ அல்லது இல்லையோ, இல்லையென்றால், வருத்தம் தரும் முடிவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரால்,66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது, அவர், டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
அதனை தொடர்ந்து காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்புக்கு 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன.
இந்நிலையில், டிரம்ப் நேற்று கூறும்போது, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் , ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று கேட்கப்பட்டதற்கு, இல்லை என டிரம்ப் கூறினார்.
ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்குமோ அல்லது இல்லையோ, இல்லையென்றால், வருத்தம் தரும் முடிவாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்துள்ளார். .
English Summary
Gaza ceasefire Trump imposes a time limit What is Hamas stance?