"எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றிய விஜய்"! சி.எம்.சார் என்னை என்ன வேண்டுமானாலும் செய்ங்க! ஸ்டாலினை வம்பிழுத்த விஜய்! - Seithipunal
Seithipunal


கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவத்துக்குப் பின், மூன்று நாட்கள் கழித்து, தவெக தலைவர் விஜய் தனது மனநிலையை வெளிப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் விஜய் கூறியதாவது:“என் வாழ்க்கையில் இது போன்ற சூழலை நான் இதுவரை சந்தித்ததில்லை.மனதில் வலி மட்டுமே உள்ளது… அந்த வலியை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை.மக்கள் என்னை பார்க்க வருவது அவர்களின் அன்பும் பாசமும் தான். அதற்காக நான் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த சுற்றுப்பயணத்தில், மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்ற எண்ணம் என்னுள் ஆழமாக இருந்தது. அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்து, காவல் துறையிடம் அனுமதி பெற்று, பாதுகாப்பு கருதி இடங்களைத் தேர்வு செய்து சென்றோம். ஆனால் நடக்கக் கூடாத விஷயம் நடந்துவிட்டது.

நானும் மனிதன்தானே… இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது அந்த ஊரை விட்டுவிட்டு நான் எப்படிச் சென்று விட முடியும்?
அங்கு திரும்பி போகவே விரும்பினேன். ஆனால் அப்படி சென்றால் அங்கே மீண்டும் பதற்றமான சூழல்கள் உருவாகக் கூடாது என்பதால் திரும்பிச் செல்லவில்லை.

உயிரிழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்புக்கு ஈடாகாது என்பதை நான் உணர்கிறேன்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் விரைவில் நலம்பெற வேண்டும் என மனமாறி வேண்டுகிறேன்.

நாங்கள் இதுவரை 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். எங்கும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை.சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில்தான் பேசியோம். அதற்கு அப்பால் எங்களால் எந்தத் தவறும் செய்யப்படவில்லை.

இருந்தாலும் என் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் உண்மைகளைப் பேசும் தோழர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள்.

முதலமைச்சர் சார், உங்களுக்கு கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என்னைத் தான் குறியிடுங்கள்.
என்னை எப்படிச் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் என் தோழர்களையும் தொண்டர்களையும் பாதிக்காதீர்கள்.

நான் வீட்டிலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ இருப்பேன்.நண்பர்களே, தோழர்களே… நமது அரசியல் பயணம் இன்னும் வலிமையுடன், தைரியத்துடன் தொடரும்.”வீடியோவின் முடிவில், விஜய், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த ஆதரவும் புரிதலுக்கும் நன்றியை தெரிவித்தார்.

கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜயின் இந்த நேர்மையான மற்றும் உணர்ச்சி மிகுந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM sir do whatever you want with me Vijay who defeated Stalin


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->