சர்ச்சைக்குரிய ஸ்டிக்கரை வெளியிட்ட டெலகிராம்... கொதித்தெழுந்த இளைஞர்கள்..! - Seithipunal
Seithipunal


நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் அதற்கான செயலிகள் இன்றளவில் ஏராளமாக நிறைந்து கிடக்கிறது. இவ்வாறான பல செயலிகளில் நமது மனதில் மற்றும் நமக்கு நன்றாக தெரிந்த செயலிகளாக முகநூல், வாட்சப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஹெலோ, டெலகிராம் போன்ற பல்வேறு செயலிகள் உள்ளது. 

இந்த செயலிகள் அறிமுகமாவதற்கு முன்னதாக நமது கருத்துக்களை நாம் நமது நண்பர்களுடன் குறுஞ்செய்தியின் வாயிலாக பேசி வந்தோம். இவ்வாறாக பல செயலிகள் அறிமுகமாகி, இதில் உள்ள பல பிரத்தியேக அம்சத்தின் மூலமாக நாம் பல பயன்களை பெற்று வருகிறோம். 

telegram image issue, telegram child image, telegram child image issue,

இருப்பினும் இவ்வாறான செயலிகளில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ... அதே அளவில் தீமையும் நிறைந்துள்ளது. இந்த செயலிகளை நல்ல விதமாக கையாளும் நபர்கள் நமது நட்பு வட்டாரத்தில் இருந்தால் பிரச்சனை இல்லை.. இல்லையேல் இதனால் ஏற்பட்ட பல பிரச்சனைகளின் விபரீதங்கள் நாம் நன்கு அறிந்ததே. 

இவ்வாறாக செயலிகள் அறிமுகமாகும் சமயங்களில் பொதுவாக விளம்பரம் என்ற யுக்தி பெரிதும் உதவி செய்கிறது. இது இணையதள செயலிகளுக்கு மட்டுமல்லாது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து அனைத்திற்கும் இன்றளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற விளம்பரங்கள் மற்றும் குறித்த பொருளின் நம்பகத்தன்மை தொடர்பான விளம்பர காட்சிகள், விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தேவைப்படுகிறது. 

telegram image issue, telegram child image, telegram child image issue,

பொதுமக்களால் அதிகளவில் உபயோகம் செய்யும் பொருட்களில் கூட இன்றளவில் ஆபாசம் அல்லது உணர்ச்சியை அதிகரிக்கும் வீடியோ பதிவுகளுடன் கூடிய காட்சிகள் மூலமாக குறித்த பொருளுக்கு விளம்பரங்கள் பதிவு செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது. 

கவர்ச்சிதான் அனைத்துமே, வெறும் உடல் சதையை வைத்துதான் எல்லாமே தீர்மானம் செய்யப்படுகிறது என்ற மோசமான மனநிலை பெரும்பாலான மனிதர்களிடம் இருந்து வருகிறது. இது சில இடங்களில் சதையை பார்த்து ஆசைப்படுவதும், சில இடங்களில் சதை இல்லையே என்று வருத்தப்படும் சோகமும் இருந்து வருகிறது. ஏற்றத்தாழ்வான எண்ணங்கள் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

telegram image issue, telegram child image, telegram child image issue,

டெலகிராம் செயலியானது கடந்த 2013 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் 14 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை சகோதரர்களான நிகோலாய் மற்றும் பாவெல் துரோவ் ஆகியோர் அறிமுகம் செய்தனர். டெலகிராம் செயலிக்கான தலைமையகம் பெர்லினில் உள்ளது. இந்த செயலியில் தற்போது பிற பிரத்தியேக செயலிகளை போல பல்வேறு அம்சங்களான வாய்ஸ் கால், சாட்டிங், பிரைவேட் சாட்டிங் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது. 

telegram image issue, telegram child image, telegram child image issue,

இந்த அம்சத்துக்காக டெலகிராம் நிறுவனத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பர புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளது. இந்த புகைப்படம் ஓபன் (OPEN) என்ற விளக்கத்திற்கு அமைந்துள்ளது. இந்த புகைப்படத்தில் சிறுமியொருவரின் எதிர்புறத்தில் கரடி கண்களை மறைத்து அமர்ந்த்துகொண்டு உள்ளதுபோலவும், சிறுமி தனது ஆடையை திரண்டு காட்டுவது போலவும் உள்ளது. 

telegram image issue, telegram child image, telegram child image issue,

இந்த விஷயம் இணையதள நெட்டிசன்கள் மற்றும் சமூகநல விமர்சகர்களின் கண்ணில் புலப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை கண்ட இளைஞர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் சிறுமியின் புகைப்படம் அமைந்துள்ளது பெரும் அநீதியாக இருக்கிறது. இந்திய நாட்டில் பெண்களை பாராத தாய், திரௌபதி, பத்ரகாளி, அம்மன் போன்ற பல பெயர்களில் தெய்வமாக அதிகளவில் வழிபாடு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

மேலும், சிறுமி தனது ஆடையை திறந்து காட்டுவது போல புகைப்படம் அமைக்கப்பட்டு இருப்பது, சமூக வலைத்தளங்கள் மூலமாக டெலகிராம் செயலி மக்களின் மனதில் விதைக்க வருவது என்ன?.. இந்த புகைப்படத்தின் மூலமாக டெலகிராம் கூற வரும் கருத்து என்ன?.. கருத்துக்களை கூறும் அல்லது செயலியின் விபரத்தை தெரிவிக்க பிற புகைப்படங்கள் இல்லையா? என்பது தொடர்பான கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும், இதனை டெலெக்ராம் நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றும் இணையதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telegram use child sexual image


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->