#வீடியோ | இந்தியர் என நினைத்து சொந்த ரசிகனை அடிக்க பாய்ந்த பாக், வீரர் ஹரிஸ் ராஃப்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் தனது மனைவியுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு நகரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது ஹரிஸ் ராஃப்பை பார்த்து அவ்வழியே சென்ற நபர் ஒருவர், பாகிஸ்தான் அணியின் படுதோல்வி மற்றும் உலக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது குறித்து கிண்டல் செய்யும் வகையில் ஏதோ சொல்லி உள்ளார். இதனால் கோபமடைந்த ஹரிஸ் ராஃப், அவரை தாக்குவதற்காக அவரை துரத்திக் கொண்டு ஓடினார்

ஹரிஸ் ராஃப்பின் மனைவி ஹரிசை சமாதானம் படுத்த எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் ஹரிஸ் அதனைப் பொருட்படுத்தாமல் அந்த நபரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இந்த நிலையில், இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் ஹரிஸ், டிரோல் செய்தவர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும் என்று ஹரிஸ் ராஃப் கூறியிருந்தார். இதற்கு அந்த நபர் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று பதில் அளித்திருந்தார்.

ஹரிஷ் ராஃப் மற்றும் அந்த நபரிடையே வாக்குவாதம் முத்தியதால், இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது ஹரிஷ் ராஃப்பின் ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup 2024 Pakistan cricket Haris Rauf


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->