மதன் ரவிச்சந்திரன் எங்கே?... தலைமறைவா? மாயமா? கடத்தலா?...! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் மதன் ரவிச்சந்திரன் எவ்வித பதிவும் வெளியிடவில்லை என்பதால், அவர் தலைமறைவாகிவிட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என்ற கேள்வியுடன் #மதன்_எங்கே என்ற ஹாஷ்டேக் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயமாக, பாஜகவின் முக்கிய புள்ளி கே.டி ராகவன், பெண்ணுடன் ஆபாசமாக உரையாடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. மேலும், பாஜகவில் இதனைப்போன்று பெண்களை போகப்பொருளாக பார்க்கும் பலர் உள்ளார்கள், பல அரசியல் கட்சிகளிலும் இவ்வாறான ஆட்கள் உள்ளார்கள், அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள் என வீடியோக்களை பதிவு செய்த மதன் ரவிச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தெரிவித்து இருந்தார். 

இந்த வீடியோவை பதிவு செய்த மதன் ரவிச்சந்திரன் கூடுதலாக தெரிவித்த தகவலில், எங்களின் உயிருக்கு இனி ஆபத்து ஏற்பட்டாலும் ஏற்படலாம், அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் உண்மையை கட்டாயம் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். மேலும், பல வீடியோக்களை அடுத்தடுத்து நான் பதிவு செய்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். இதனால் மதனின் வலையில் சிக்கியிருந்தது யார்? அடுத்ததாக யாரின் வீடியோ வெளியாகப்போகிறது? என்று பரபரப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டது. 

மதன் வீடியோ வெளியிட்ட யூடியூப் பக்கம், அவரின் சொந்த முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் அனைத்தும் முடங்கிப்போன நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் எந்த சமூக வலைத்தளத்திலும் மதன் ரவிச்சந்திரனின் பதிவுகள் இல்லை. இதனால் அவர் என்ன ஆனார்? என்றும் தெரியவில்லை என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இன்று ட்விட்டர் பக்கத்தில், #மதன்_எங்கே என்ற ஹாஷ்டேக்கும் பதிவு செய்யப்பட்டு ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. 

ட்விட்டர் கணக்காளர் பதிவு செய்த ட்விட்டில், " திமுக பத்தி அத்தனை வீடியோ போட்டும் சுதந்திரமாய் வெளியே நடமாட முடிந்தது சேனலில் வேலை பார்க்க முடிந்தது தினுமும் விவாதம் நடத்த முடிந்தது. ஆனால் பாஜகவை பத்தி ஒரே ஒரு வீடியோ ஆளையும் காணோம் சேனலையும் காணோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social Media Twitter Handlers Ask about Where Is Madan Ravichandran


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->