சென்னை Vs கோவை: ட்விட்டர் சந்தில் சண்டை.. யாருய்யா நீங்கல்லாம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, விரைவில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமைப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறது. 

நேற்று மாலை பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை தொடர்ந்து, மாலை முதலாகவே மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கியது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக 75 கூட்டணி தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. 

தேர்தல் முடிவுகளின் படி சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தில் திமுக வெற்றி அடைந்தது. கொங்கு மண்டலம், சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி அடைந்தது. 

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் சென்னையை சார்ந்த நபர்கள் சிலர் கோவை மக்கள் முட்டாளா? அங்கு அதிமுக + பாஜக வந்துள்ளது என பிரச்சனையை ஆரம்பிக்க, எதிர்தரப்பில் கோவையை சார்ந்தவர்கள் சென்னை மக்கள் முட்டாளா? நீங்கள் யாருக்கு வாக்களித்துள்ளீர்கள்? நிதிகளின் வாரிசுக்கா? என பதிலிக்க, ட்விட்டர் பக்கத்தில் சென்னை Vs கோவை என ஐ.பி.எல் போட்டித்தொடர் போல சண்டையிட்டு வருகின்றனர். 

சென்னை கொரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், கோவையும் வரும் நாட்களில் சென்னையை போல கடுமையாக பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டு அரசு அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் வெற்றியை வைத்து யார் முட்டாள்? என கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கு? என்பது தான் புரியவில்லை.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social Media Trending about TN Election 2021 Result Chennai Vs Coimbatore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->