8 கோடி பேருக்கான வாழ்வாதாரம்; பைக் டாக்ஸிகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் அனுமதி தரவேண்டும்; அரசுகளுக்கு அமைச்சர் கட்கரி..!
Minister Gadkari requests that all state governments should give permission to bike taxis
நாடு முழுவதும் போக்குவரத்து டிராஃபிக், அதிக விலைவாசி உள்ளிட்ட காரணங்கள், பயணத்தில் ஏற்படும் கூட்டநெரிசல் ஆகியவை காரணமாக அதிகளவிளான மக்கள் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து பைக் டாக்ஸி போன்ற இலகு வழி போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர்.
அத்துடன், 24 மணி நேரத்தில், விரும்பிய இடத்தில் இருந்து உடனடியாக அணுகவும், நினைத்த நேரத்திற்கு விரைவில் செல்லவேண்டிய இடத்துக்கு செல்லவும், குறைந்த கட்டணம் என்பதால், சாமான்ய மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பைக்-டாக்ஸிகள் பிடித்துள்ளது.
இந்நிலையில், பைக் டாக்ஸியில் சொந்த பைக்குகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்றும், அதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ, கார் டாக்ஸி ஓட்டுநர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், அரசு தரப்பில் பைக்-டாக்ஸி சார்ந்து எந்தவித சட்ட விதிமுறைகளும் விதிக்கப்படாததால் தலைகவசம் அணியாதது, பாலியல் தொல்லை, பயணிகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி போன்ற பிரச்னைகளும் பெரிதாக எழுந்துள்ளன.

உதாரணமாக கர்நாடகாவில் பைக் டாக்ஸியில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்மாநிலத்தில் அதற்கான அனுமதி இன்னும் பிரச்சினையாகவே உருவாகியுள்ளது. அத்துடன், முறையான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை பைக்-டாக்ஸி ஓட்டுவது குற்றம் என தமிழ்நாடு அரசும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பைக்-டாக்ஸியை மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கட்கரி கோரிக்கையாக வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது; பைக் டாக்ஸிகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் அனுமதி தரவேண்டும் என்றும், இதன் அனுமதி 08 கோடி பேருக்கு வாழ்வாதாரமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பைக் டாக்ஸிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் போக்குவரத்து என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்று பல மாநிலங்கள் பைக் டாக்ஸிகளை இயக்க ஒப்புதல் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும், இதில் தவறு செய்யும் ஓட்டுநர்களுக்கு எதிர்மறை புள்ளிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Gadkari requests that all state governments should give permission to bike taxis