பாய்ஸ் லாக்கர் ரூமில் அரங்கேறிய பெரும் கொடூரம்... இணையத்தால் அரங்கேறிய பகீர் உண்மை..!! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான ட்விட்டரில் கடந்த இரண்டு நாட்களாக பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற பெயரில் டேக்குகள் உருவாகி வைரலாகி வந்தது. இந்த பதிவில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "பாய்ஸ் லாக்கர் ரூம்" என்ற குழுவானது உருவாக்கப்பட்டு, பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்து மதிப்பெண்ணும் வழங்கி வந்துள்ளனர். 

இதுமட்டுமல்லாது மாணவர்கள் அநாகரீகமாக கருத்துக்களை கூறி, பாலியல் பலாத்காரம் செய்வது எப்படி என்பது தொடர்பான பேச்சும் அரங்கேறியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிலால் சம்பந்தப்பட்ட சிறுவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், இந்த குழு தொடர்பான விபரம் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், இந்த தகவலின் உண்மை தன்மையை புரிந்துகொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, 15 வயது மாணவனை விசாரணை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Social media trend boys locker room boys speech about child abuse


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->