அந்த வீடியோ உண்மையில்லை! டீப் ஃபேக் வீடியோவில் சிக்கிய சச்சின்!  - Seithipunal
Seithipunal


கேமிங் செயலி ஒன்றை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளம்பரப்படுத்துவது போன்று ஒரு காணொளி அண்மையில் வெளியாகி இருந்தது.

அந்த காணொளியில் “பணம் சம்பாதிப்பது இவ்வளவு எளிதா? எனக்கு இது தெரியாமல் போய்விட்டதே! எனது மகளே இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்” என்று சச்சின் டெண்டுல்கர் பேசுவது போல் இருந்தது.

இந்நிலையில், இந்த காணொளியை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள சச்சின், இது போலியானது. நான் இப்படி பேசி விளம்பரப்படுத்தவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

சச்சினின் அந்த விளக்கத்தில், "இந்த காணொளி போலியானது. இப்படி தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்து வருத்தமான ஒன்று.

இது போன்ற போலியான காணொளி, விளம்பரங்கள் குறித்து அனைவரும் புகாரளிக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.

நாம் சமூக ஊடகங்களில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படியான தவறான தகவல் மற்றும் போலி காணொளிகளை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்” என்று சச்சின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sachin fake video viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->