வாட்ஸ் அப்பில் வந்த புதிய வசதி - இனி ஸ்டிக்கரை இப்படியும் அனுப்பலாம்.!!
new update in whatsapp
மெட்டா நிறுவனம் இயக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியில் மக்களின் தேவைக்காக புதிய புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு முக்கிய அப்டேட் கொண்டு வரப்பட்டது. அதாவது, இதுவரைக்கும் 1 நிமிடத்திற்கு மட்டுமே வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்க முடிந்த நிலையில், தற்போது 1.5 நிமிடங்கள் வரை வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.
இந்த நிலையில் தான், தற்போது மீண்டும் ஒரு அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்சன் வாட்ஸ் அப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக வாட்ஸ் அப் பயனர்கள் வேறு செயலிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது வாட்ஸ் அப்பிலேயே ஸ்டிக்கரை உருவாக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. பயனர்கள் உருவாக்கும் ஸ்டிக்கரை ஒருங்கிணைத்து வைக்கும் வகையில், பேக் ஆப்சன் கொண்டுவரப்பட்டது.
அதன் படி பல்வேறு பூக்களின் புகைப்படங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி வைத்திருந்தால், அதை அனைத்தையும் ஒன்றிணைத்து பூக்கள் என்ற பேக்கேஜில் கொண்டு செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த பேக்கேஜில் இருக்கும் ஸ்டிக்கரை உங்களின் நண்பர்களுக்கு மொத்தமாகவும் அனுப்பிக் கொள்ளலாம்.